Thursday 29 September 2011

விளையாடிய பொழுதுகள் ........

அத்தியாயம்-2 
காச்சிட்டான் கள்ளச்சிட்டான் கள்ளன் வாரான் ஓடிப்போ....ஓடிப்போ......

கை வீசி உனை சிறை பிடித்த கணம் .....

உலகையே வென்றது போல் கூத்தாடியது கபடமில்லா மனம் அந்தநாட்களில்.........

நீள நூல்கொண்டு ,உன் வாலில் கட்டி உயரப்
பறக்கவிட்டு உனை பின்தொடர்ந்தோடிய அந்தநாட்களில்......

மழைக்கு பிந்தியநாட்களில் உன் வருகை....உயரப் பறந்து திரியும் உனை
அடித்து வீழ்த்திட கையில் விளக்குமாத்து குச்சிகளுடன் காத்திருந்த
அந்தநாட்களில்........

ஈ பிடித்து உனக்கு உணவாக ஊட்டிய அந்தநாட்களில்.......

உன் தலை சுண்டி உனது ஆயுளை அறிந்த அந்தநாட்களில்......

இரவில் அடைக்கலமாய் வீட்டிற்குள் வந்த உனை பிடித்து, உம்மாவிடம்
அடிவாங்கிய அந்தநாட்களில்.......

உன் சிறகொடித்து உனை எறும்பு புற்றுக்குள் போட்டு ரசித்த அந்தநாட்களில்.......

ஊசித்தும்பியை பாசித்தும்பிக்கு பசியாறக் கொடுத்த அந்தநாட்களில்.......

கையில் இருந்து கீழே விழுந்த உனை, கோழிகள் ஓடிவந்து கொத்தித்தின்ற
அந்தநாட்களில்.......

மதில் சுவர்களிலும்,செடிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் உன் வால் பிடிக்க, பதுங்கி பதுங்கி வரும்வேளையிலே                                      “காச்சிட்டான் கள்ளச்சிட்டான்
                                              கள்ளன் வாரான் ஓடிப்போ,,,,ஓடிப்போ...” என பாடி உனை விரட்டிவிடும்
                     பால்ய நண்பனை ஜென்மவிரோதியாய் பார்த்த   அந்தநாட்களில்.......

அந்தநாட்களில்.......எங்களது பொழுதுகளை மகிழ்ச்சிகரமாய் ஆக்கிய நீங்கள் எங்களது சந்ததிகளை மகிழ்விக்க வரமாட்டீர்கள் என சத்தியமாய் எங்களுக்கு தெரியாது அந்தநாட்களில்.......

அந்தநாட்களில்.......உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம் நாங்கள்,,,, ஆகையால் வந்தீர்கள் நீங்கள்.
இன்று வரவேற்க யாருமில்லை ......அதனால் நீங்கள் வரவுமில்லை....


ஓ.......

பாசி,கள்ளன்,தோட்டான்,கரிமிலகாய்,குதிரை,மணிலாச்சிட்டான்,மாழ்பழச்சிட்டு,
மயில்வால் தும்பிகளே .......நீங்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டீர்கள்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடாதீர்கள்....

புத்தகப்புழுக்களாய் மாறிவிட்ட குழந்தைகளின் குழந்தை உள்ளத்தை
மீட்டெடுக்க எனதருமை தும்பிகளே ....வாருங்கள் ....வாருங்கள்...

காத்திருக்கும் தம்பிகளுக்காக   வாருங்கள்  தும்பிகளே வாருங்கள்........




3 comments:

  1. எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த நாட்களின் ஆனந்தம் திரும்பக் கிடைக்காது...

    சிவாஜி படத்தில் ஒரு அருமையான பாடல் வரும்:

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

    பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

    புத்தகம் பையிலே
    புத்தியோ பாட்டிலே
    பள்ளியைப் பார்த்ததும்
    ஒதுங்குவோம் மழையிலே

    நித்தமும் நாடகம்
    நினைவெல்லாம் காவியம்
    உயர்ந்தவன் தாழ்ந்தவன்
    இல்லையே நம்மிடம்

    பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
    கடமையும் வந்தது கவலையும் வந்தது

    பாசமென்றும் நேசமென்றும்
    வீடு என்றும் மனைவி என்றும்
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    அமைதி எங்கே?

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பெரியவன் சிறியவன்
    நல்லவன் கெட்டவன்
    உள்ளவன் போனவன்
    உலகிலே பார்க்கிறோம்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    தவறுகள் செய்தவன் எவனுமே
    தவிக்கிறான் அழுகிறான்

    ReplyDelete
  2. இளைமை நினைவுகளை இனிமையாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி- மறைந்து வரும் பூச்சியினத்திற்கு விழிப்பிணர்வு பகிர்வாக இருந்தது! பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. மனதிற்கு இதமாக இருந்தது! நன்றி!!Word verification எடுத்துவிடுங்கள், பின்னூட்டம் எளிதாக இருக்கும்

    ReplyDelete